Home அரசியல் தேசிய முன்னணியின் வெற்றியை ஏற்றுக்கொள்ளுங்கள் – நஜிப்

தேசிய முன்னணியின் வெற்றியை ஏற்றுக்கொள்ளுங்கள் – நஜிப்

545
0
SHARE
Ad

27732_najib3கோலாலம்பூர், டிச 05 –  13 வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பது குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் சாடியுள்ளார்.

அத்துடன் தனது  வெற்றியை எதிர்கட்சித் தலைவர் அன்வாரோடு ஒப்பிட்டு ஒரு பூப்பந்தாட்ட விளையாட்டு போல் வர்ணித்துள்ளார்.

முதல் சுற்றில் நஜிப் 21 – 15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார், இரண்டாவது சுற்றில் நஜிப் 5-21 என்ற கணக்கில் தோல்வியுற்றார். மூன்றாவது சுற்றில் நஜிப் 21 – 16 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். விளையாட்டு விதிமுறைகளின் படி, நஜிப் வெற்றியடைந்தார். ஆனால் அன்வார் தான் 57 புள்ளிகள் பெற்றுள்ளதாகவும், நஜிப் 47 புள்ளிகள் தான் பெற்றார் என்றும் கூறி போராட்டம் செய்கிறார்” என்று நஜிப் இன்று அம்னோ பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நம்மிடம் முறை இருக்கிறது. நாம் விளையாடுகிறோம். யார் பெரும்பான்மையோ அவர்கள் வெற்றியடைகிறார்கள்” என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணி 9 மாநிலங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் பக்காத்தான் 4 மாநிலங்களில் தான் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும் நஜிப் தெரிவித்தார்.

“உண்மையில் இந்த போட்டியே ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம்  எதிர்கட்சிகள் 3 விதமான சின்னங்களுடன், சிந்தனைகளுடன் களமிறங்கினார்கள். ஆனால் அம்னோ ஒரே ஒரு சின்னத்துடன் களமிறங்கி அதிக வாக்குகளை அடைந்தது. அப்படி பார்த்தால் அம்னோ தான் அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது” என்றும் நஜிப் கூறினார்.