Home One Line P2 ஈபிள் கோபுரத்தை குண்டு வைத்து தகர்ப்பதாக அச்சுறுத்தல்

ஈபிள் கோபுரத்தை குண்டு வைத்து தகர்ப்பதாக அச்சுறுத்தல்

407
0
SHARE
Ad

பாரிஸ்: பிரெஞ்சு தலைநகரின் அடையாளமான ஈபிள் கோபுரத்தை குண்டு வைத்து தகர்க்க அடையாளம் தெரியாத நபர் மிரட்டியதைத் தொடர்ந்து புதன்கிழமை 2 மணி நேரத்திற்கு அக்கோபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் காலி செய்யப்பட்டன.

பரிசோதனையின் முடிவுகளில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்று அமலாக்கப் பிரிவினர் தெரிவித்தனர். அது மீண்டும் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது.

ஒரு நபர், ‘அல்லாஹு அக்பர்’ என்று கோஷமிட்டு, ஈபிள் கோபுரத்தில் ‘எல்லாவற்றையும் தகர்த்துவிடுவேன்’ என்று கூறியதாக, பெயர் குறிப்பிட மறுத்த ஒரு காவல் துறை வட்டாரம் கூறியது.

#TamilSchoolmychoice

கோபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை அதிகாரிகள் சுற்றி வளைத்து, போக்குவரத்தைத் திருப்பி, மதியம் 12.15 மணிக்கு ஈபிள் கோபுரத்தை காலி செய்தனர்.

இரண்டாம் உலகப் போரின் போது மிக நீண்ட காலமாக மூடப்பட்ட இக்கோபுரம், கொவிட்19 பரவுவதால் மீண்டும் நீண்ட காலம் மூடப்பட்டது. ஜூன் 26 அன்று மீண்டும் அது பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டது.