Home இந்தியா லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கான அற்புதமான துவக்கம்: நரேந்திர மோடி பெருமிதம்

லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கான அற்புதமான துவக்கம்: நரேந்திர மோடி பெருமிதம்

459
0
SHARE
Ad

bjp

புதுடில்லி, டிசம்பர் 9 – நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில்  பா.ஜ., பெரு வெற்றி பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கான அற்புதமான துவக்கம் இது , என பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மொத்தமுள்ள 589 தொகுதிகளில், பா.ஜ., கட்சி, 409 தொகுதிகளில் அதாவது, 70 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் 272க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கான அடையாளங்கள் என்று  சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், மக்களின் விருப்பத்தையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன எனவும்  பா.ஜ.,வுக்கு, தெளிவான தீர்ப்பை அளித்ததன் மூலம் தங்களின் விருப்பத்தை தெளிவாகவும் உரக்கவும் மக்கள் தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தார். பா.ஜ.,வின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு மிகுந்த நன்றி. நாட்டு மக்களின் விருப்பங்களையும் கனவுகளையும் நிறைவேற்ற பா.ஜ., தொடர்ந்து பாடுபடும் என  அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து, சத்தீஸ்கரில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் ரமண் சிங்கையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.