Home இந்தியா 4 மாநிலங்களிலும் பாஜ ஆட்சி அமைக்கும்

4 மாநிலங்களிலும் பாஜ ஆட்சி அமைக்கும்

502
0
SHARE
Ad

rajanat sing

டெல்லி, டிசம்பர் 9- ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பாஜ ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் (படம்)  தெரிவித்தார்.

இதுதொடர்பாக, புதுடெல்லியில் அவர் நேற்று அளித்த பேட்டியில், “பாஜவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு பொதுமக்களிடையே இருக்கும் செல்வாக்கு பாஜவின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 4 மாநிலங்களிலும் பாஜ ஆட்சி அமைக்கும். அங்கு எங்கள் கட்சி முதல்வர்கள் பதவி ஏற்பர். 4 மாநில தேர்தல் முடிவுகள் இறுதியாக வெளியான பிறகு, பாஜ வாங்கிய ஓட்டு சதவீதம் பற்றி அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், மத்திய பிரதேசத்தில் பாஜ வெற்றிப் பெற்றிருப்பதன் மூலம், சிவராஜ் சிங் சவுகான் முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற மாநிலங்களுக்கு பாஜ பார்வையாளர்கள் சென்று, சட்டசபை கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் எனவும் ராஜ்நாத் சிங் கூறினார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜ அபார வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், டெல்லி மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் ஆட்சி அமைப்பதற்கு தேவையானதை விட ஒருசில இடங்களை மட்டுமே அதிகமாக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.