Home வாழ் நலம் அலுவலகத்தில் ஏற்படும் சோர்வை போக்கும் வழிமுறைகள்

அலுவலகத்தில் ஏற்படும் சோர்வை போக்கும் வழிமுறைகள்

805
0
SHARE
Ad

tired

கோலாலம்பூர், டிசம்பர் 11 – பணியில் ஏற்படும் சோர்வு நமது உடலையும் மனதையும் பாதிக்கக்கூடும். அதனால், பணியில் ஏற்படும் சோர்வை போக்குவதற்கு பல வழிகளை தேடுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

வேலைக்கு செல்லும் அனைவருமே விரும்பி காத்திருப்பது விடுமுறை நாட்களுக்காகத் தான். ஏன்னெனில், அன்று மட்டும் தான் எந்தவித பொறுப்புகளும் மன அழுத்தங்களும் இல்லாமல் ஓய்வாக இருக்கலாம். வேலையில் இருக்கும் மன அழுத்தங்களும் பொறுப்புகளும் அவர்களை பெரிதும் சோர்வடையச் செய்கின்றது. அலுவலகத்தில் ஏற்படும் இந்த சோர்வை களைய சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

#TamilSchoolmychoice

1. எழுச்சியான காலை வணக்கம்

இதனை நீங்கள் அன்றாடம் செய்ய வேண்டும். இது வேலையில் ஏற்படும் சோர்வை போக்குவதற்கான வழிகளில் ஒன்றாகும். உங்கள் உடலுக்கு தினமும் காலை ஒரு ஊக்கத்தை அளிக்கவேண்டும். நேர்மறையான நோக்குடன் உங்கள் நாளை தொடங்க வேண்டும். இந்த நாள் நமது சாதகமாகவே இருக்கும் என்றும் நீங்கள் அவற்றை சிறந்த முறையில் கையாளுவீர்கள் என்றும் எண்ண வேண்டும்.

2. காலை உணவை தவிர்க்க கூடாது

உடலில் ஏற்படும் சோர்வை போக்க நினைத்தால், காலை உணவை தவிர்க்க கூடாது. உடலுக்கு தேவையான புரதச்சத்து, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை எடுப்பது மிக நல்லது.

3. மூலிகை பானங்கள் அருந்துதல்

மூலிகை பானங்களான க்ரீன் டீ, நெல்லிக்காய் சாறு, கற்றாழை சாறு போன்றவை அன்று நாள் முழுவதும் தெம்பாக வைக்க உதவும். சோர்வை போக்குவதற்கான வழிகளில் மூலிகை பானம் அருந்துவதும் ஒன்றாகும்.

4. இடைவேளை விடுதல்

சில நேரங்களில் மேஜை முழுவதும் வேலைகள் குமிந்து இருக்கலாம். ஏராளமான வேலை நிமித்த சந்திப்புகள் இருக்கலாம். ஆனால், இவற்றிக்கு நடுவில் இடைவேளை எடுக்க மறந்து விடக்கூடாது.

5. மதிய உணவில் கவனம் தேவை

மதிய உணவை குறைவாக சாப்பிடுவதோ அல்லது தவிர்க்கவோ கூடாது. இது மதிய நேரங்களில் உங்கள் சக்தியை குறைத்து சோர்வை ஏற்படுத்தும். அதனால், மதிய உணவில் கவனம் கொள்ள வேண்டும். அதிக காய்கறிகளை உட்கொள்வதன் மூலமாக வேலையில் ஏற்படும் சோர்வை போக்கலாம்.

6. காற்றோட்டம்

ஒரு அறையின் உள்ளேயே நாள் முழுவதும் உட்கார்ந்து வேலைப்பார்த்தல் நமக்கு சோர்வை ஏற்படுத்தும். சிறிது இடைவேளை எடுத்து வெளியில் வந்து காற்றோட்டமான இடத்தில் நிற்க வேண்டும்.

7. நண்பர்களுடன் உரையாடுங்கள்

அலுவகத்தில் ஏற்படும் சோம்பலை போக்க உங்களுடன் வேலை செய்யும் சக நண்பர்களுடன் சிறிது நேரம் நீங்கள் கலந்துரையாடலாம். இந்த நேரங்களில் வேலை பற்றியோ அல்லது அதில் இருக்கும் பிரச்சினைகளை பற்றியோ பேசக்கூடாது. பொது தகவல்களை பகிர்த்தல், நகைத்தல் உங்கள் சோர்வை குறைக்கும்.

8. மாலை நேரங்களில் ஓய்வு

வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு சற்று நேரம் தொலைக்காட்சி பார்ப்பதையோ அல்லது நடைபயிற்சி செய்வதையோ மேற்கொள்ளலாம். இதன் மூலமாக பணியில் ஏற்படும் சோர்வை போக்கலாம்.

9. குடும்பத்துடன் சிறிது நேரம்

வேலையில் என்னதான் நேர்ந்தாலும், சிறிது நேரம் குடும்பத்திற்கு என்று ஒதுக்க வேண்டும். இது உங்களுக்கு மனவலிமையையும் அமைதியும் அளிக்கும்.