Home நாடு சொத்துமதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

சொத்துமதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

626
0
SHARE
Ad

tian-chuaகோலாலம்பூர், டிச 16 –  சொத்துமதிப்பீட்டு வரி உயர்வைக் கண்டித்து 300 மேற்பட்ட சொத்துரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் இன்று கோலாலம்பூர் டிபிகேஎல் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா கூறுகையில், சொத்துமதிப்பீட்டு வரி உயர்வைக் கண்டித்து சுமார் 20,000 கடிதங்கள் டிபிகேஎல் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், “கோலாலம்பூரிலுள்ள சொத்துக்களுக்கு வரி உயர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் தியா சுவா செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

“தேர்தல் நடத்தி அதன் மூலம் மாநகர மேயரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் மேயருக்கும், டிபிகேலுக்கும் மக்களின் கஷ்டம் புரியும்” என்றும் தியான் சுவா தெரிவித்தார்.

நடப்பு கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ அகமட் பீசல் தாலிப்பை பதவி விலகுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர்.

இவ்விவகாரம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை விடுத்த கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், சொத்துமதீப்பீட்டு வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறும் சொத்துரிமையாளர்கள், வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.