Home நாடு தென் தாய்லாந்தின் டானோக், சாடாவ் நகர்களில் தொடர் குண்டு வெடிப்பு! இருவர் மரணம்! பல...

தென் தாய்லாந்தின் டானோக், சாடாவ் நகர்களில் தொடர் குண்டு வெடிப்பு! இருவர் மரணம்! பல மலேசியர்கள் காயம்!

769
0
SHARE
Ad

Untitled (1)டானோக், டிசம்பர் 23 – மலேசியர்கள் விடுமுறைக் காலங்களில் அதிகமாகச் செல்லும் தென் தாய்லாந்தின் எல்லை நகரான டானோக்கில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் பல கட்டிடங்கள், கார்கள் சேதமுற்றதோடு, பலரும் காயமடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மனித உடல்களும், அவர்களும் சிதைந்த உறுப்புகளும் நகர் முழுவதும் கிடப்பதாக பத்திரிக்கைத் தகவல்கள் கூறுகின்றன.

தொடர்ந்து மற்ற எல்லைப்புற நகர்களான பாடாங் பெசார், சாடாவ் ஆகிய நகர்களிலும் குண்டுகள் வெடித்தன.

இருவர் மரணமடைந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பல மலேசியர்களும் அடங்குவர் என்றும் முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.