Home நாடு டானோக் குண்டுவெடிப்பு : மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை – விஸ்மா புத்ரா தகவல்

டானோக் குண்டுவெடிப்பு : மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை – விஸ்மா புத்ரா தகவல்

653
0
SHARE
Ad

image.jpg.pagespeed.ce.EujruwRbfWபெட்டாலிங் ஜெயா, டிச 23 – தென் தாய்லாந்தின் எல்லை நகரான டானோக்கில் நேற்று நடந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்புகள் அனைத்தும் செல்பேசிகள் மூலமாக இயக்கப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.

தாய்லாந்து காவல்துறைத் தலைவர் நோப்பாடால் புக்சோமான் இது குறித்து கூறுகையில், பாடாங் பெசார் காவல்நிலையம் முன்பாக முதல் குண்டு வெடிப்பும், அதற்கு அடுத்த 20 நிமிடங்களில் சடவோ காவல்நிலையம் முன்பாக இரண்டாவது குண்டு வெடிப்பும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

“காவல்நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு செல்பேசிகள் மூலமாக அவை இயக்கப்பட்டுள்ளன. 3 வது வெடிகுண்டு இரண்டு கார்களில் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, மலேசிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஹம்சா ஸைனுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 தொடர் குண்டுவெடிப்பில் மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“குண்டுவெடிப்பில் மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை” என்று ஹம்சா உறுதியாகக் கூறியுள்ளார்.

முன்னதாக காயமடைந்த 20 பேரில் 2 மலேசியர்களும் அடங்குவர் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஸ்மா புத்ராவில் தற்போதைய அறிக்கைப்படி, தாய்லாந்தைச் சேர்ந்த 27 பேர் காயமடைந்துள்ளனர். அதில் மலேசியர்கள் யாரும் கிடையாது.