Home 13வது பொதுத் தேர்தல் “இனி லியாவ், சுவா அணி என்ற பிரிவு கிடையாது” – லியாவ் கருத்து

“இனி லியாவ், சுவா அணி என்ற பிரிவு கிடையாது” – லியாவ் கருத்து

1055
0
SHARE
Ad

liow-tiong-lai5-june7_400_267_100கோலாலம்பூர், டிச 23 – மசீச கட்சி தற்போது புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளதாகவும், கட்சியை இனி ஒற்றுமையுடனும், வலுவுடனும் வழிநடத்துவதாகவும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் கூறியுள்ளார்.

கட்சியிலுள்ள அடிதட்டு உறுப்பினர்கள் வரை அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே குடும்பமாக இணைந்து செயல் பட வேண்டும் என்றும் லியாவ் கட்சி உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார்.

நேற்று நடந்த மசீச கட்சியின் 60 வது ஆண்டுக் கூட்டத்தில் பேசிய லியாவ், “நாம் அனைவரும் ஒரே குடும்பம். மசீச குடும்பம்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இனி லியாவ் அல்லது சுவா அணி (முன்னாள் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்) என்று கட்சியில் எந்த ஒரு பிரிவும் கிடையாது என்று லியாவ் குறிப்பிட்டார்.

மேலும் கட்சியின் அடித்தட்டு உறுப்பினர்கள் அனைவரையும் தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாது அடிக்கடி சந்திக்கவிருப்பதாகவும் லியாவ் உறுதியளித்தார்.

கட்சியில் பல புதிய மறுசீரமைப்புகளை செய்ய அனைவரும் தனக்கு ஆதரவுடன் இருக்க வேண்டும் என்றும் லியாவ் கேட்டுக்கொண்டார்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தியதோடு, தோல்வியுற்றவர்கள் தொடர்ந்து கட்சியில் ஒற்றுமையுடன் செயல்படுங்கள் என்றும் லியாவ் குறிப்பிட்டார்.