Home 13வது பொதுத் தேர்தல் அடுத்த மண்டேலாவாக நஜிப் மாற வேண்டும் – மசீச பேராளர் வலியுறுத்து

அடுத்த மண்டேலாவாக நஜிப் மாற வேண்டும் – மசீச பேராளர் வலியுறுத்து

852
0
SHARE
Ad

Najib-300-x-200கோலாலம்பூர், டிச 23 – இனவாத அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து அடுத்த மண்டேலாவாக பிரதமர் நஜிப் (படம்)மாற வேண்டும் என்று மசீச கட்சியின் பேராளர் ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த 1970 ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. காரணம் அப்போது பூமிபுத்ராக்களின் வறுமை விகிதம் 60 சதவிகிதமாக இருந்தது.ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என்றும் கெடா மாநில மசீச பேராளரான லீ இயான் வாங் தெரிவித்துள்ளார்.

“இன்று பூமி புத்ராக்களின் வறுமை விகிதம் 5 சதவிகிதம் தான்.எனவே மீதமுள்ள 95 சதவிகிதத்தை இந்த பாரபட்சமான கொள்கைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.” என்று லீ இயான் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் நேற்று நடந்த மசீச போதுப்பேரவையில் அனைவரையும் எழுந்து நின்று மறைந்த தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராளர்களைக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், இந்த இனவாத அரசியலுக்கு எதிரான மண்டேலாவின் போராட்டம் அவரோடு முடிந்து விடக்கூடாது. ஒருநாள் நஜிப் துன் ரசாக்கும் இன அடிப்படையிலான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அடுத்த மண்டேலாவாக மாற வேண்டும் என்றும் லீ இயான் கேட்டுக்கொண்டார்.