Home வாழ் நலம் 45 வயதை எட்டும் பெண்களுக்கான ஊட்டச்சத்துகள்

45 வயதை எட்டும் பெண்களுக்கான ஊட்டச்சத்துகள்

852
0
SHARE
Ad

Happy woman eat vegetable salad

கோலாலம்பூர், டிசம்பர் 23- பொதுவாகவே வயது அதிகமாக உடலில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். குறிப்பாக பெண்கள் வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டு வலி, கால் வலி மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

ஆகவே இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான ஊட்டச்சத்துக்கள் (வைட்டமின்கள்) நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஊட்டச்சத்துக்களை 45 வயதிற்கு மேல் தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

#TamilSchoolmychoice

1. 45 வயதை தொடும் பெண்களுக்கு வைட்டமின் பி12 மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். அதிலும் அறுவை சிகிச்சை நடந்திருந்த அல்லது இதயத்தில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு, இச்சத்து மிகவும் முக்கியமானது. ஆகவே வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த மாட்டிறைச்சி, கானாங்கெளுத்தி மற்றும் முட்டைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2. வைட்டமின் பி மற்றொரு அவசியமான வைட்டமினாகும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். ஏனெனில் இவை தான் ஒரு நாளைக்கு வேண்டிய சக்திகளை கொடுக்கிறது. எனவே பசலைக்கீரை, உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளை தவறாமல் எடுத்துக் கொண்டால், இச்சத்துக்களைப் பெறலாம்.

3. தினமும் காலையில் 15 நிமிடம் சூரிய ஒளி உடலில் படுமாறு இருந்தால், அது உடலில் ஏற்படும் சோர்வை நீக்கிவிடும். அதுமட்டுமல்லாமல், சால்மன் அல்லது பாலை அதிகம் குடித்தால், அது உடலில் வைட்டமின் டி-யின் அளவை அதிகரிக்கும்.

4. வைட்டமின் Q10 45 வயதான பெண்கள் அவசியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய ஊட்டச்சத்தானது மீன், கல்லீரல், நவதானியங்கள் போன்றவற்றில் அதிகம் இருக்கும்.

5.  இறுதி மாதவிடாயினால் பெண்கள் அதிகப்படியான இரும்புச்சத்துக்களை இழக்க நேரிடும். இதனால் பல பெண்கள் இரத்தசோகைக்கு உள்ளாவார்கள். எனவே இந்த நிலையை தவிர்க்க, பெண்கள் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

6. 45 வயதைக் கடக்கும் போது பெண்கள், வைட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இத்தகைய வைட்டமின் ஏ சத்தானது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முள்ளங்கி போன்றவற்றில் அதிகம் இருக்கும்.

7. வாழைப்பழத்தில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துள்ள உணவை உட்கொண்டால், நரம்பு மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.