Home நாடு “மனிதன் தான் தீமைகளை செய்கிறான் – பேய்கள் அல்ல” – மகாதீர்

“மனிதன் தான் தீமைகளை செய்கிறான் – பேய்கள் அல்ல” – மகாதீர்

461
0
SHARE
Ad

mahathir-forehead1கோலாலம்பூர், டிச 23 – மனிதன் செய்யும் தீமைகளையும், வன்முறைகளையும் கண்டு தான் நான் அஞ்சுகிறேன். மாறாக பேய்களையும், அமானுஷ்யங்களையும் கண்டு அல்ல என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அது போன்ற பேய்களையும், அமானுஷ்யங்களையும் பார்த்து மலாய்காரர்கள் கட்டுண்டுகிடக்கிறார்கள் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அவர்கள் அல்லா தங்களை பாதுகாக்கிறார் என்பதையும் நம்புகிறார்கள். அது போன்ற அமானுஷ்யங்கள் இஸ்லாமுக்கு எதிரானவை. இந்த உலகத்திற்கெல்லாம் அல்லாவே தலைவராக இருக்கிறார் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது போன்ற அமானுஷ்யங்களை நம்புவதால் தான் மக்கள் அரசு மருத்துவமனைகள் உட்பட, பல அலுவலகங்களில் நீர் தெளித்து, ஓதி பிரார்த்தனை செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், “அது போன்ற பேய்கள் எங்கிருந்து வருகின்றன? இதற்கு இஸ்லாமின் நிலைப்பாடு என்ன?” போன்ற கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

“அவையெல்லாம் சக்தி வாய்ந்தவை என்று நம்புவதாக இருந்தால், அல்லாவை விட வேறு விஷயங்களை நாம் தொடர்பு படுத்திக்கொள்கின்றோம் என்று பொருள். அது போன்ற தீய சக்திகள் இருப்பதாக எண்ணி அல்லாவை விட அதன் மேல் நம்பிக்கை வைக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நான் மனிதன் செய்யும் தீய செயல்களையும் மற்றும் வன்முறைகளையும் கண்டு தான் பயப்படுகின்றேன். மற்றவைகளைக் கண்டு எதற்கும் பயந்தது கிடையாது. அதே நேரத்தில் கையில் கூர்மையான ஆயுதங்கள் அல்லது துப்பாக்கி தோட்டக்கள் இருந்தால் ஒருவர் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும் என்பதையும் நான் நம்பவில்லை. நான் உதவி கேட்பது அல்லாவிடம் மட்டும் தான்” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.