Home கலை உலகம் இளையராஜா மருத்துவமனையில் அனுமதி!

இளையராஜா மருத்துவமனையில் அனுமதி!

590
0
SHARE
Ad

AVN5_ILAYARAJA_21557f

சென்னை, டிச 23 – இசைஞானி இளையராஜா உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வருகின்றன.

இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா, தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 28 ஆம் தேதி கோலாலம்பூரில், கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பவதாரணி ஆகியோர் கலந்து கொள்ளவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.