Home அரசியல் ம.தி.க தேர்தல்: பி.எஸ் மணியம் அணி மகத்தான வெற்றி!

ம.தி.க தேர்தல்: பி.எஸ் மணியம் அணி மகத்தான வெற்றி!

766
0
SHARE
Ad

MDA-Logoகோலாலம்பூர், டிச 23 – நேற்று தலைநகர் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடைபெற்ற மதிக (மலேசிய திராவிட கழகம்) தேர்தலில், தலைவராக பி.எஸ்.மணியம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் அவரது தலைமையிலான அணியும் மகத்தான வெற்றியடைந்துள்ளது.

அக்கட்சியின் நடப்புத் தலைவரான மணியத்தை எதிர்த்து மு.கோவிந்தசாமி போட்டியிட்டார்.

இதில் மணியம் 177 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று தலைவர் பதவியைத் தற்காத்துக் கொண்டார். கோவிந்தசாமிக்கு 42 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதில் 19 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

அதே போல், தேசியத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில், எப். காந்தராஜ் மற்றும் இரா.பெரியசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 177 வாக்குகள் பெற்று காந்தராஜ் வெற்றி பெற்றார். பெரியசாமிக்கு 50 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

மேலும், 2 தேசிய உதவித்தலைவர் பதவிகளுக்கு 4 பேர் போட்டியிட்டனர். அவர்களில் க.இராமனுக்கு 152 வாக்குகளும், மு.பாலனுக்கு 137 வாக்குகளும், வ.கதிரவனுக்கு 25 வாக்குகளும், ச.ஜீவக்குமாருக்கு 21 வாக்குகளும் கிடைத்தன.

இராமனும், பாலனும் உதவித்தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கட்சியின் பொதுச்செயலாளராக மு.சு.மணியம், துணை பொதுச் செயலாளராக கே.ஆர்.அன்பழகன், தேசிய பொருளாளராக கெங்கையா, கழக அமைச்சு செயலாளராக கா.நா.கோபால் மற்றும் நிதிச் செயலாளராக டாக்டர் மு.முரளி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மத்திய செயலவைக்கு நான்கு பேர் போட்டியிட்டனர். அவர்களில் பொன்ராமனுக்கு 187 வாக்குகளும், ச.இராமசாமிக்கு 177 வாக்குகளும், பெ. பொன்னுசாமிக்கு 63 வாக்குகளும், கு.இராமனுக்கு 20 வாக்குகளும் கிடைத்தன.

இளைஞர் அணி மற்றும் மகளிர்

கட்சியின் இளைஞர் அணித் தலைவராக தமிழ் இனியன், செயலாளராக ம.இளவரசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மகளிர் அணித்தலைவி பதவிக்குப் போட்டியிட்ட வழக்கறிஞர் குமுதா 175 வாக்குகளும், செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மலர்விழி 175 வாக்குகளும் பெற்றனர்.

கணக்காய்வாளர் பதவிக்கு பெ.பொன்னுசாமி மற்றும் பக்கிரிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.