கோலாலம்பூர், டிசம்பர் 24 -தாய்மைப் பேற்றை அடைந்த எல்லா பெண்களும் பிரசவத்திற்குப் பிறகு வயிற்றுப் பகுதியில் சேர்ந்த சதையை எப்படி குறைப்பது என்று கவலைப்பட ஆரம்பித்துவிடுகின்றனர்.
வயிற்றுப் பகுதியில் பல காரணங்களால் அதிக சதை சேர்கிறது. குறிப்பாக, கருவுற்றிருக்கும் போது வயிற்றைச் சுற்றிலும் இயற்கையாகவே எடை அதிகரித்து விடுகிறது. பிரசவத்திற்கு பின்பு இந்த எடையை குறைப்பது சிரமமாகத் தான் இருக்கும். எனினும் வயிற்றுக் கொழுப்பை குறைப்பதற்கான மிகச் சிறந்த ஆலோசனைகள் உள்ளன.
அவற்றின் படி, நடந்தால் விரைவில் வயிற்று சதையை குறைக்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளை தவிர்த்துவிட்டு, வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் சேர்வதை தவிர்க்கலாம்.
காலத்துக்கு ஏற்றபடி பல ரகங்களில் கிடைக்கும் புதிய காய்கள் மற்றும் பழங்கள் உடலுக்கு மிகவும் ஏற்றவை. இவை உடலுக்கு வித்தியாசமான சத்துப்பொருட்களை அளிக்கின்றன. நடைப்பயிற்சியை மிஞ்சிய உடற்பயிற்சி ஏதும் இல்லை. எனவே அதற்கான நேரம் மற்றும் இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.