Home தொழில் நுட்பம் HTC-ன் புத்தம் புதிய திறன்பேசி

HTC-ன் புத்தம் புதிய திறன்பேசி

503
0
SHARE
Ad

htc_desire_phone_002

கோலாலம்பூர், டிசம்பர் 24-  டிசயர் 400 (Desire 400) இரட்டை சிம் வசதி கொண்ட புத்தம் புதிய திறன்பேசி ஒன்றினை ஹெச்டிசி (HTC )அறிமுகம் செய்துள்ளது.

4.3 அங்குல அளவு மற்றும் 800 x 480 பிக்சல் தீர்மானம் (Pixel Resolution)  உடைய WVGA தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.2 GHz வேகத்தில் செயற்படக்கூடிய செயலி, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.6 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

அண்ட்ராய்டு ஜெலி பின் (Android Jelly Bean) இயங்குதளத்தினைக் கொண்ட இக்கைப்பேசியில் 4GB சேமிப்பு நினைவகம் தரப்பட்டுள்ளது.