Home உலகம் சூரிய குடும்பத்துக்கு வெளியே புது நிலவு கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்துக்கு வெளியே புது நிலவு கண்டுபிடிப்பு

578
0
SHARE
Ad

Tamil-Daily-News_83124506474

லண்டன், டிசம்பர் 24 – சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் நட்சத்திரங்கள் மின்னுவதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளியே நிலா இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது பூமியில் உள்ள நிலாவை விட 70 மடங்கு அதிக வெளிச்சத்துடன் பிரகாசிக்கிறது.

இது வியாழன் கிரகத்தை விட 4 மடங்கு பெரியதாகவும், பூமியை விட அரை மடங்கு அளவும், நமது சந்திரனை விட பல மடங்கு பெரியதாகவும் உள்ளது.