Home இந்தியா பா.ஜ கடும் கண்டனம் : ஆம் ஆத்மியின் நம்பிக்கை துரோகம்

பா.ஜ கடும் கண்டனம் : ஆம் ஆத்மியின் நம்பிக்கை துரோகம்

445
0
SHARE
Ad

Tamil-Daily-News_25594294072

புதுடெல்லி , டிசம்பர் 24- டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதன் மூலம் ஊழலை எதிர்த்து போராடுவோம் என்று மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மறந்து ஆம் ஆத்மி நம்பிக்கை துரோகம் செய்துள்ளது என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து டெல்லி மாநில பா.ஜ. பேரவை குழு தலைவர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது, “கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து ஊழலுக்கு எதிராக கடுமையாக போராடுவோம் என்று ஆம் ஆத்மி கட்சி கூறி வந்தது. தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களைதான் முன்வைத்து தீவிரமாக பிரசாரம் செய்தது.

#TamilSchoolmychoice

ஆனால், இப்போது, காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. இது கொள்கைகளை மறந்ததோடு மட்டுமல்லாது, மக்களுக்கு செய்த நம்பிக்கை துரோகமாகும். இதன் மூலம் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுகிறார் கெஜ்ரிவால்.

ஊழல் காங்கிரஸ் என்று வர்ணித்துவிட்டு அதனுடன் கைகோர்த்து ஆட்சி அமைப்பது வெட்கக்கேடு. எனினும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க பா.ஜ. வாழ்த்து தெரிவிக்கிறது. தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அள்ளி வீசினார். அதை நிறைவேற்ற வேண்டும். எப்படி நிறைவேற்றுகிறார் என பார்ப்போம்” என ஹர்ஷ் வர்தன் கூறினார்.