Home வணிகம்/தொழில் நுட்பம் ஒரே மலேசியா திட்டத்தின் கீழ் ஜோகூர் மாநிலத்தில் 25,500 வீடுகள் பிரதமர் தகவல்

ஒரே மலேசியா திட்டத்தின் கீழ் ஜோகூர் மாநிலத்தில் 25,500 வீடுகள் பிரதமர் தகவல்

686
0
SHARE
Ad

images (1)ஜோகூர்,பிப்.13- ஒரே மலேசியா திட்டத்தின் கீழ் ஜோகூர், இஸ்கண்டார் பகுதியில் 25,500 வீடுகள் கட்டப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் நேற்று அறிவித்துள்ளார்.

5 மேம்பாட்டாளர்களைக் கொண்டு கட்டப்படவுள்ள வீட்டின் விலை மேம்பாட்டாளர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி என விலை நிர்ணயித்து இருப்பதாகவும், ஆனால் ஒரே மலேசியா திட்டத்தின் கீழ் ஒரு வீட்டின் விலை 1 லட்சத்து 99 ஆயிரம் என வழங்கப்படவுள்ளதாகவும், இதனால் 51 ஆயிரம் வெள்ளி வீடு வாங்குபவர்கள் கழிவு பெறுவர் எனவும் அவர் கூறினார்.

ஜோகூர் மாநிலத்தில் வீடுகளின் தேவை அதிகமாக இருப்பதால் இத்திட்டத்தை உருவாக்கி இருப்பதாகவும், இதனால் பல லட்சம் பேர் பயன் அடைவர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் ஒரே மலேசியா திட்டத்தின் கீழ் கட்டப்படும் அனைத்து வீடுகளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பராமரிக்கும் என்றும் அவர் சொன்னார்.

மக்களின் தேவைகளை உணர்ந்து தே.மு. அரசாங்கம் செயலாற்றி வருவதாகவும் பிரதமர் கூறினார்