Home பொது கல்விக் கொள்கை மத்திய அரசாங்கத்தின் வசமே – வழக்கறிஞர் பொன்முகம் கருத்து

கல்விக் கொள்கை மத்திய அரசாங்கத்தின் வசமே – வழக்கறிஞர் பொன்முகம் கருத்து

598
0
SHARE
Ad

indexகோலாலம்பூர்,பிப்.13- சிலாங்கூர் மாநிலத்தில் ஏன் இலவசக் கல்வி வழங்கவில்லை என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு மக்கள் கூட்டணி தலைவர்கள் பதிலளித்து வருகின்றனர்.

கல்விக் கொள்கையின் அதிகாரம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதை பல்வேறு கல்விச் சட்டங்களும்,அரசியல் விதிமுறைகளும் தெளிவாக எழுதப்பட்டுள்ளன என்று வழக்கறிஞர் பொன்முகம் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்களிலும் என்ன மாதிரியான பாடத்திட்டங்களை கொண்டிருக்க வேண்டும். ஒரு மாணவரிடம் இருந்து எவ்வளவு பள்ளி கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் போன்ற அனைத்தும் மத்திய அரசாங்கமே முடிவு செய்ய முடியும்.

#TamilSchoolmychoice

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டரசு பிரதேச நகர்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் டத்தோ சரவணன், இலவசக் கல்வி குறித்து டத்தோ ஶ்ரீ அன்வார் பொய்யுரைக்கிறார் என்று கூறியதற்கு தாம் பதிலளிப்பதாக வழக்கறிஞர் பொன்முகம் கூறினார்.

அது மட்டுமல்லாமல் எவ்வாறு பள்ளிக்கூடங்கள் கட்ட வேண்டும். எந்த தகுதியுடைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற அனைத்து உரிமைகளும் மத்திய அரசாங்கத்திடமே இருக்கிறது.

ஆகவே, மாநில அரசாங்கம் அவற்றில் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுத்த முடியாது. அவ்வாறு செய்வது சட்டத்திற்கு முரணானது.

ஒரு சில விஷயங்களை மாநில அரசாங்கத்தால் செய்ய முடியும். உதாரணமாக பள்ளிகள் கட்ட நிலம் வழங்க மாநில அரசால் முடியும். காரணம் இடம் வழங்கும் உரிமை மாநில அரசாங்கத்திடம் உள்ளது என்ற விளக்கத்தையும் வழக்கறிஞர் பொன்முகம் வழங்கினார்.