Home நாடு செலவுகளைக் குறையுங்கள்! விலையை உயர்த்தாதீர்கள்! – மகாதீர் கருத்து

செலவுகளைக் குறையுங்கள்! விலையை உயர்த்தாதீர்கள்! – மகாதீர் கருத்து

411
0
SHARE
Ad

Tun-Dr.-Mahathir-Mohamad1கோலாலம்பூர், டிச 26 –  அத்யாவசியப் பொருட்களை நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே பராமரிப்பது அல்லது செலவைக் கட்டுப்படுத்துவது இவை இரண்டில் ஏதாவது ஒன்றை செய்வது  தான் அரசாங்கத்திற்கு நல்லது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கருத்துரைத்துள்ளார்.

இன்று அவர் தனது வலைத்தளத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள கருத்தில், “போட்டியின் காரணமாக ஒரு தொழிலில் அதன் லாபம் குறைந்தால், ஒன்று விலையேற்றம் செய்ய வேண்டும் அல்லது பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும். சில நேரங்களில் பொருட்களின் விலையை ஓரளவிற்கு அதிகப்படுத்தலாம். தற்போது அரசாங்கத்தைப் பொறுத்தவரை விலையைக் குறைத்து விற்பனையை அதிகப்படுத்துவதன் மூலம் லாபம் அடையலாம்” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

“தொழிலில் பொருட்களின் விலையில் மாற்றங்கள் செய்யும் போது பொருட்களின் விலை, அதன் செய்முறை, சேதாரம், வேகம் மற்றும் அளவு ஆகியவற்றை ஆராய்ந்து விலை குறைப்போ அல்லது சில பொருட்களின் விலையை அதிகரிக்கவோ செய்வார்கள். அதே போன்ற முறையைப் பயன்படுத்தி அரசாங்கம், அத்யாவசியப் பொருட்களின் விலையை ஆராய்ந்து அதன்படி தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்” என்று மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பெட்ரோல் மற்றும் சீனி விலைக்கு வழங்கி வந்த மானியம் குறைப்பு, மின் கட்டண உயர்வு, டோல் விலை உயர்வு என்று மக்கள் தற்போது அரசாங்கத்தின் அதிரடி மாற்றங்களினால் அவதியுற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடக்கது.