இது குறித்து இன்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த நஜிப், “ஜிஎஸ்டி என்பது புது விஷயமல்ல. அதுபற்றி நாங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அது வரவு செலவு திட்டத்தில் இருக்குமா? இருக்காதா? என்பதை அறிந்து கொள்ள வரவு செலவுத் திட்டம் வெளியிடப்படும் வரை காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியிடவுள்ள 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், 4 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியை, நஜிப் அறிமுகம் செய்வார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதை பிரதமர் நஜிப் உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.