Home வாழ் நலம் கைகளில் நலம் அறியலாம்

கைகளில் நலம் அறியலாம்

584
0
SHARE
Ad

health

வாஷிங்டன், டிசம்பர் 30- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். அதேபோல் உடலின் ஆரோக்கியத்தை கைகளின் வழியே கண்டறியும் பழக்கம் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வாறு கைகளை பார்த்து நோயாளிகளின் உடலில் உள்ள பல கோளாறுகளை எளிதில் சொல்லிவிட முடியுமாம்.

உடலின் எல்லா உறுப்புகளுமே, ஏதாவது ஒரு சமயத்தில் மற்ற உறுப்புகளின் கோளாறுகளை சுட்டிக் காட்டவே செய்கின்றன. ஆனால் கைகளிலிருந்து அதிக அளவிலான விஷயங்களை தெரிந்துக் கொள்ள முடியும்.

#TamilSchoolmychoice

ஏனெனில் மேல்பரப்பு, கீழ்ப்பரப்பு, தோல், நகங்கள், ரேகைகள், 27 எலும்புகள், மூட்டுகள், கொழுப்புத் திசுக்கள், தசைகள், இரத்தக் குழாய்கள், நரம்புகள், நிணநீர் அமைப்பு ஆகிய பல பகுதிகள் கைகளில் இருப்பதால் உடலின் ஏற்படும் குறைபாடுகளை எளிதில் வெளிப்படுத்தி விடுகிறது.

மனிதனின் மனநிலையை, உடல் நிலைகளை கைகள் கண்ணாடி போன்று பிரதிபலிக்கக் கூடியவை. கைகளை பிசைவதன் மூலம் ஒருவர் மன இறுக்கத்துடன் இருப்பதை எளிதில் அறியலாம். கை விரலின் முனைகள் குமிழ் போன்று வீங்கியிருந்தால் அவை நுரையீரலில் (எம்பிசிமா) கோளாறு அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

குழந்தைகளுக்கு விரலின் முனைகள் வீக்கத்துடனும், நகங்கள் நீல நிறமும், சாம்பல் நிறத்துடனும் காணப்பட்டால் அவை பிறவிக் கோளாறுகளை வெளிப்படுத்துகின்றன. உள்ளங்கைகளில் நிறம் மாறுவது நோய்க்கான முக்கியமான அறிகுறி.

அசாதாரணமான மஞ்சள் நிறம் காணப்பட்டால் இரத்தத்தில் கொழுப்பு பொருட்கள் மிகுந்து ‘ஹைப்பர் லிப்போ புரோடினி மியா’ என்ற நோய் ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறது. அதேபோல் அதிக அளவில் சிவந்திருந்தால் ‘பல் மோர் எரிதீமா’ என்ற நோய் கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. கைகளை அறிந்து உடல் நலம் காப்போம்!