Home இந்தியா நித்யானந்தாவின் சன்னியாசியான ரஞ்சிதாவிற்கு எதிர்ப்பு வலுக்கிறது!

நித்யானந்தாவின் சன்னியாசியான ரஞ்சிதாவிற்கு எதிர்ப்பு வலுக்கிறது!

566
0
SHARE
Ad

nith-ranji4

பெங்களுரு, டிசம்பர் 30 – பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவிடம் ஆசி பெற்று சன்னியாசியாக மாறியுள்ளார் நடிகை ரஞ்சிதா.

தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார்.

#TamilSchoolmychoice

அங்கு நித்யானந்தா சாமியாருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற காணொளி பட காட்சிகள் சில வருடங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. நித்யானந்தாவின் மடாலயங்கள் தாக்கப்பட்டது. ரஞ்சிதா தலைமறைவானார், நித்யானந்தா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிடி ஆணையில் (ஜாமீனில்) வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சன்னியாசியாகியுள்ளார். நித்யானந்தாவின் 37-வது பிறந்தநாள் விழா பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் நடந்தது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் சன்னியாசியாக விரும்புகிறவர்களுக்கு நித்யானந்தா தீட்சை வழங்குவது உண்டு.

இந்த பிறந்த நாளிலும் 40–க்கும் மேற்பட்ட பெண்கள் தீட்சை பெற்றனர். அதில் ஒருவர் நடிகை ரஞ்சிதா. இதனால் ஆசிரமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உரிய சடங்குகள் செய்து ரஞ்சிதா சன்னியாசியாக தீட்சை பெற்றார். பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து ருத்ராட்சை மாலைகள், மற்றும் காவி உடை அணிந்து சன்னியாசியாக தீட்சை பெற்றார்.

பின்னர் மேடையில் பேசிய ரஞ்சிதா, உண்மை, அமைதி, அகிம்சை போன்றவற்றை நான் புரிந்து கொண்டேன். இதன் மூலமே சன்னியாசி ஆகி இருக்கிறேன்.

முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன் என்றும் இனிமேல் எப்போதும் ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன் எனவும் கூறியுள்ளார். ரஞ்சிதாவுக்கு நித்யானந்தா சன்னியாசி தீட்சதை வழங்கியதற்கு மடாதிபதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.