இந்தியாவில் ஆள் கடத்தல், பண மோசடி உள்ளிட்டப் பல்வேறு வழக்குகளில் அவர் தேடப்படுகிறார்.
ஆன்மிகம் குறித்து சொற்பொழிவாற்றும் நித்தியானந்தா, அவ்வப்போது தாம் உருவாக்க உள்ள கைலாசா நாடு குறித்தான பதிவுகளை வழங்கி வருகிறார்.
கைலாசாவுக்கான மொத்தப் பொருளாதாரம், பொருளாதாரக் கொள்கைகளும் தயார் என்று அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
“300 பக்க ஆவணத்தை தயாரித்துள்ளோம். கைலாசாவுக்கான தனி பணம், அதற்கான கொள்கை, உள்ளூர் பணப் பரிமாற்றம், வெளிநாடுகளுடனான பணப் பரிமாற்றம் உள்ளிட்டவைகள் குறித்தான விதிமுறைகள் தயார். ” என்று அவர் கூறினார்.
Comments