Home One Line P1 சிலிம் சட்டமன்றம்: நாளை வேட்பு மனு தாக்கல்

சிலிம் சட்டமன்றம்: நாளை வேட்பு மனு தாக்கல்

679
0
SHARE
Ad

ஈப்போ: சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை இங்குள்ள தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றத்தின், ஸ்ரீ தஞ்சோங் மண்டபத்தில் தொடங்க உள்ளது.

வேட்புமனு பாரங்களை சமர்ப்பிக்க வேட்பாளர்களுக்கு காலை 9 மணி தொடங்கி 10 மணி வரை அவகாசம் வழங்கப்படும்.

கொவிட்19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க நாடு தற்போது மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வைக்கப்பட்டுள்ளதால், வேட்பாளர்கள், ஒரு முன்மொழிவாளர் மற்றும் ஆதரவாளருடன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

#TamilSchoolmychoice

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், வேட்பு மனு தாக்கல் நடைபெறும் மையத்தில் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலில் துன் மகாதீரின் கட்சியான பெஜூவாங் தானா ஆயர் கட்சியின் வேட்பாளராக அமிர் குஷாயிரி முகமட் தனுசி போட்டியிட உள்ளார்.

புதன்கிழமை இரவு சிலிம்ரிவரில் நடைபெற்ற கூட்டத்தில் துன் மகாதீர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அமிர் குஷாயிரி ஷாரியா எனப்படும் இஸ்லாமிய சட்டத் துறை வழக்கறிஞராவார்.

இவர் தேசிய முன்னணி வேட்பாளராக தஞ்சோங் மாலிம் அம்னோ தலைவர் முகமட் சைய்டி அசிஸை எதிர்த்துப் போட்டியிடுவார்.

ஜூலை 15-ஆம் தேதி டத்தோ முகமட் குசைரி அப்துல் தாலிப் இறந்ததைத் தொடர்ந்து சிலிம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.