Home One Line P1 சிலிம் சட்டமன்றம்: தேமு வேட்பாளராக தஞ்சோங் மாலிம் அம்னோ தலைவர் தேர்வு

சிலிம் சட்டமன்றம்: தேமு வேட்பாளராக தஞ்சோங் மாலிம் அம்னோ தலைவர் தேர்வு

826
0
SHARE
Ad

ஈப்போ: ஆகஸ்ட் 29- ஆம் தேதி நடைபெறவுள்ள சிலிம் மாநில இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளராக தஞ்சோங் மாலிம் அம்னோ தலைவர் முகமட் சைய்டி அசிஸை கூட்டணி அறிவித்துள்ளது.

முகமட் சைய்டி, 43, தேர்வு குறித்த அறிவிப்பை இன்று இங்குள்ள சிலிம் பெல்டா குடியிருப்பில் கூட்டணியின் சிலிம் இடைத்தேர்தல் இயக்குநராக இருக்கும் பேராக் தேசிய முன்னணி தலைவர் டத்தோ சாராணி முகமட் வெளியிட்டார்.

ஜூலை 15-ஆம் தேதி டத்தோ முகமட் குசாய்ரி அப்துல் தாலிப் மரணமுற்றதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

வேட்புமனுத் தாக்கல் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களாக ஆரம்பத்தில் ஒன்பது பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்தன என்று சாராணி கூறினார். ஆனால், தேர்தலில் வெற்றி பெறுவது உட்பட அம்சங்கள் அடிப்படையில் ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் ஒன்பது, பின்னர் நாங்கள் ஐந்து, மூன்று மற்றும் இறுதியாக ஒருவரைத் தேர்ந்தெடுத்தோம்

“அவர்கள் அனைவரும் தகுதிவாய்ந்த, திறமையான நபர்கள். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்தவர்களில் சிறந்தவர்” என்று அவர் கூறினார்.

14- வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்த மறைந்த முகமட் குசாய்ரி அத்தொகுதியில் வென்றார்.