Home One Line P1 கொவிட்19: 3 மலேசியர்களுக்கு தொற்று!

கொவிட்19: 3 மலேசியர்களுக்கு தொற்று!

382
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,114-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 11 சம்பவங்களில் 8 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர். மேலும், 3 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். தொற்றுக் கண்ட மூவரும் மலேசியர்கள்.

#TamilSchoolmychoice

இன்று 8 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,817 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 172 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் அவசரப் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.