Home One Line P1 காவல் துறை, ஆயுதப்படை உறுப்பினர்களை அவமதித்ததற்காக அஸ்ரி ஜாங்கூட் விசாரிக்கப்படுவார்

காவல் துறை, ஆயுதப்படை உறுப்பினர்களை அவமதித்ததற்காக அஸ்ரி ஜாங்கூட் விசாரிக்கப்படுவார்

507
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ‘ஹாட் பர்கர் மலேசியா’வின் நிறுவனர் முகமட் அஸ்ரி ஹமீட் அல்லது அஸ்ரி ஜாங்குட்டை மலேசிய காவல் துறை விசாரிக்க உள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியான ஒரு காணொளியில் காவல் துறையினர் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்களை அவமதிப்பது போன்ற அவரது அறிக்கை குறித்து இந்த விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் மியோர் பாரிடாலாத்ராஷ் வாஹிட் கூறுகையில், இந்த வாரம் தனது வாக்குமூலம் அளிப்பதற்காக முகமட் அஸ்ரி அழைக்கப்படுவார் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

டிராவர்ஸ் காவல் நிலையம் மற்றும் ஜாலான் துன் ரசாக் காவல் நிலையத்தில் இன்று இரண்டு புகார் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் கூறினார்.

“பொது தேசத்துரோகத்திற்கு வழிவகுக்கும் அறிக்கைகள் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998- இன் பிரிவு 233 ஆகியவற்றிற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (சி)- இன் படி விசாரணைகள் நடத்தப்படுகின்றன,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

காவல் துறை உறுப்பினர்கள் வழிபடுவதில்லை என்ற கருத்தினை முன்வைத்தது நியாயமற்றது என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் பாடோர் முன்னதாக தெரிவித்திருந்தார்.