Home One Line P2 நித்தியானந்தாவை கண்டுபிடிக்க இண்டர்போல் ‘ப்ளூ கார்னர்’ அறிக்கையை வெளியிட்டது!

நித்தியானந்தாவை கண்டுபிடிக்க இண்டர்போல் ‘ப்ளூ கார்னர்’ அறிக்கையை வெளியிட்டது!

678
0
SHARE
Ad

புது டில்லி: குஜராத் காவல் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க, சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியாந்தாவுக்கு எதிராக அனைத்துலக காவல் துறை (இண்டர்போல்) ப்ளூ கார்னர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

புளூ கார்னர் அறிக்கை என்பது, சம்பந்தப்பட்ட ஒருவரை கண்டுபிடிக்க அனைத்துலக மக்கள் தகவல் தெரிவிப்பதாகும்.

பாலியல் பலாத்காரம் மற்றும் ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா ஈக்வடோர் நாட்டில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆயினும், அந்நாட்டு அரசு அந்த செய்தி மறுத்து அவர் ஹயிதிக்கு சென்றிருக்கலாம் என்று தெரிவித்தது.

#TamilSchoolmychoice

கடந்த 2010-ஆம் ஆண்டு, பாலியல் பலாத்கார புகார் மற்றும் நடிகையுடன் ஆபாசமாக இருந்ததாகக் கூறி நித்யானந்தா இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்

கடந்த டிசம்பர் மாதம் நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டை இந்திய அரசு இரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், கைலாசா எனும் மிகப் பெரும் இந்து தேசத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.