Home Featured தமிழ் நாடு திருப்பதியில் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சாமி தரிசனம்!

திருப்பதியில் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சாமி தரிசனம்!

900
0
SHARE
Ad

Tirupati Elumalaiyan temple Nithyananda Actressதிருப்பதி – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் சீடர்களுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பெங்களூருவில் உள்ள நித்யானந்தா மடத்தின் பீடாதிபதி நித்யானந்தா, கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலிலும் (வாயுலிங்கேஸ்வர்), திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் நடிகை ரஞ்சிதா மற்றும் சீடர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

நேற்று முன்தினம் வாயுலிங்கேஸ்வர் கோவிலுக்கு வந்திருந்த நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.

#TamilSchoolmychoice

அவர்களும் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தனர். புதிய தோற்றத்தில் ஜடா முடியுடன் வந்திருந்த நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் காண ஏராளமானோர் கூடிவிட்டனர்.

பத்திரிகையாளர்களும் அவர்களை அந்த தோற்றத்தில் புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால், நித்யானந்தாவின் சீடர்கள் செய்தியாளர்களை புகைப்படம் எடுக்கவிடாமல் தடுத்தனர்.

இதனால், பத்திரிகையாளர்களுக்கும் நித்யானந்தாவின் சீடர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் காரில் புறப்பட்டு திருமலைக்கு சென்றனர்.

இந்நிலையில், நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தனர். 16 சீடர்களுடன் வந்திருந்த அவர்கள், வரிசையில் நின்று நைவேத்ய பிரேக் தரிசனத்தில் ஏழு மலையானை வழிபட்டனர்.