Home Featured நாடு ‘த மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளம் இன்றோடு நிறுத்தம்!

‘த மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளம் இன்றோடு நிறுத்தம்!

919
0
SHARE
Ad

he-Malaysian-Insider-TMI-logo (1)கோலாலம்பூர் – அண்மையில் மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் முடக்கப்பட்ட ‘த மலேசியன் இன்சைடர்’ இணையதளத்தை இன்று இரவு முதல் நிரந்தரமாக மூட அதன் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

“வர்த்தகக் காரணங்களுக்காக’ அந்த இணையதளத்தை மூட, அதன் தலைமை நிர்வாகமாக ‘த எட்ஜ் மீடியா’ குழுமம் முடிவெடுத்துள்ளதாக மலேசியன் இன்சைடரின் நிர்வாக ஆசிரியர் ஜஹாபர் சாதிக் அறிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி 25 முதல் தாங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்ததாகத் தான் நம்புவதாகவும் ஜஹாபர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

 

 

 

Comments