கோலாலம்பூர் – ‘த மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளம் தனது சேவையை நிறுத்திக் கொள்வதை ‘த எட்ஜ் மீடியா’ குழுமம் உறுதிபடுத்தியுள்ளது.
இது குறித்து எட்ஜ் குழுமத்தின் தலைமைச் செயலதிகாரி மற்றும் த எட்ஜ் தகவல் தொடர்பு செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் பதிப்பாளருமான ஹோ கை தட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலேசியாவில் உள்ள செய்தி இணையதளங்களில் ‘த மலேசியன் இன்சைடர்’ முதல் மூன்று முன்னிலை இணையதளங்களில் ஒன்றாக இடம்பிடித்திருந்தாலும் கூட, தொடர்ந்து சேவை வழங்க வர்த்தக ரீதியில் போதுமான ஆதரவை ஈட்டித் தரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
‘த மலேசியன் இன்சைடர்’ இணையதளத்தை கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் எட்ஜ் குழுமம் கையகப்படுத்தியது முதல் இதுவரை 10 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், எனவே அதை தொடர்ந்து நடத்த இயலவில்லை என்றும் ஹோ கை தட் தெரிவித்துள்ளார்.