Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மீதான மேல்முறையீடு மனு நாளை மீண்டும் விசாரணை!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மீதான மேல்முறையீடு மனு நாளை மீண்டும் விசாரணை!

876
0
SHARE
Ad

jayalalithaபுதுடெல்லி – தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை நாளை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. கர்நாடக அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தனது வாதத்தை தொடர உள்ளார்.

கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து, கர்நாடக அரசு, அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான இறுதிகட்ட விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

முதலில் கர்நாடக தரப்பில் துஷ்யந்த் தவே வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை ஆச்சாரியா வாதம் முன் வைத்தார். உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஏகப்பட்ட பிழைகள் செய்ததாக வழக்கறிஞர் தவே வாதிட்ட நிலையில், ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிறுவனங்கள் பற்றி, ஆச்சாரியா வாதிட்டார்.

#TamilSchoolmychoice

வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், மார்ச் 15-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைப்பதாக, கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தனர். அதன்பேரில் நாளை மீண்டும் விசாரணை நடக்கிறது. அப்போது ஆச்சாரியா மீண்டும் தனது வாதத்தை முன் வைப்பார்.