Home Featured நாடு ஜோகூர் சுல்தான் என்னை அவமதிக்கவில்லை – நஜிப் விளக்கம்!

ஜோகூர் சுல்தான் என்னை அவமதிக்கவில்லை – நஜிப் விளக்கம்!

643
0
SHARE
Ad

najib johor sultanகோலாலம்பூர் – கடந்த வாரம் ஜோகூரில் பாரஸ்ட் சிட்டி திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு, அம்மாநில சுல்தான் கைகொடுத்து வரவேற்பு அளிக்கவில்லை என்று கூறி காணொளி ஒன்று நட்பு ஊடகங்களில் வலம் வந்தது.

இந்நிலையில், அது குறித்து இன்று விளக்கமளித்துள்ள நஜிப், தான் ஜோகூர் சுல்தானுடன் தேநீர் அருந்தியதாகவும், சுல்தான் கார் ஓட்ட, தான் அவருடன் பயணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விழாவில் சுல்தானுக்கு அருகில் அமர்ந்திருந்ததாகவும், அவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே அரண்மனையில் அவருடன் கைகுலுக்கி நலம் விசாரித்துவிட்டு, ஒரே காரில் பயணம் செய்த பிறகு, மீண்டும் விழாவில் அவருடன் எதற்கு கைகுலுக்க வேண்டும்? என்றும் நஜிப் கேள்வி எழுப்பியுள்ளார்.

படம்: நன்றி (The Star)