Home நாடு “மலேசியன் இன்சைட்” இணையத் தளம் அடுத்த வாரம் முதல் நிறுத்தப்படுகிறது

“மலேசியன் இன்சைட்” இணையத் தளம் அடுத்த வாரம் முதல் நிறுத்தப்படுகிறது

921
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆங்கில இணைய ஊடகங்களில் சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டு வந்த ‘மலேசியன் இன்சைட்’ அடுத்த வாரம் முதல் தனது சேவைகளை நிறுத்திக் கொள்ளும் என அறிவித்திருக்கிறது.

கடந்த ஓராண்டு காலமாக நடத்தப்பட்டு வந்த மலேசியன் இன்சைட், அதை நடத்தி வந்த நிறுவனம் எதிர்நோக்கிய நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்படுவதாக அந்த ஊடகத்தின் ஆசிரியர் ஜஹாபர்கான் தெரிவித்திருக்கிறார்.

“நாங்கள் எதிர்பார்த்த வாசகர் எண்ணிக்கையை எங்களால் அடைய முடியவில்லை. எனவே, எங்களின் செய்தி வெளியீடுகள், வர்த்தக ரீதியாக தொடர்ந்து இந்த ஊடகத்தை நடத்துவதில் இருக்கக் கூடிய சவால்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மீண்டும் மறு ஆய்வுகள் செய்வதற்காக எங்களின் சேவைகளை நிறுத்திக் கொள்கிறோம்” என மலேசியன் இன்சைட் ஊடகத்தின் வழி ஜஹாபர்கான் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

முன்னதாக மலேசியன் இன்சைடர் என்ற இணைய ஊடகத்தின் ஆசிரியராக ஜஹாபர்கான் அதனை வழிநடத்தி வந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டில் அந்த ஊடகம் பல்ஊடக சட்டங்களை மீறி செயல்பட்டது என்பதற்காக அரசாங்கத்தால் மூடப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 2017 மார்ச் 31-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட மலேசியன் இன்சைட் இணைய ஊடகத்தின் ஆசிரியராக ஜஹாபர் செயல்பட்டு வந்தார்.