Home உலகம் பிரான்சில் ஜஎஸ் தீவிரவாதியின் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகள்

பிரான்சில் ஜஎஸ் தீவிரவாதியின் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகள்

984
0
SHARE
Ad

பாரிஸ் – (மலேசிய நேரம் இரவு 8.00 மணி நிலவரம்) ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் கும்பலின் ஆதரவாளன் என்று கூறிக் கொண்ட ஒருவன் தென் மேற்கு பிரான்சில் ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு சிலரை பிணைக் கைதிகளாகவும் பிடித்து வைத்திருக்கிறான் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்திருக்கின்றனர்.

டிரெபெசே (Trebes) என்ற நகரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை இருவர் மரணமடைந்தனர் என்றும் இது ஒரு பயங்கரவாதச் செயல் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும் டிரெபெசே என்ற இடத்திலிருந்து சுமார் 15 நிமிட பயண தூரத்தில் உள்ள கார்காசொன்னே (Carcassonne) என்ற இடத்தில் மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்றதாகவும் இதில் காவல் துறை அதிகாரி ஒருவர் சுடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையா என்பதும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

(செய்திகள் தொடரும்)