Home நாடு எஸ்யுபிபி, யுபிபி கட்சிகள் இணைந்தன – ஒப்பந்தம் கையெழுத்தானது!

எஸ்யுபிபி, யுபிபி கட்சிகள் இணைந்தன – ஒப்பந்தம் கையெழுத்தானது!

747
0
SHARE
Ad

கூச்சிங் – சரவாக் மாநிலத்தில் உள்ள சீன சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருப்பதற்காக, சபா ஐக்கிய மக்கள் கட்சியும் (Sarawak United People’s Party), அதிலிருந்து பிரிந்து சென்ற ஐக்கிய மக்கள் கட்சியும் (United People’s Party) இன்று வெள்ளிக்கிழமை நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

சரவாக் தேசிய முன்னணியில் இணைந்து ஒரு வலிமையான கட்சியாகச் செயல்படும் நோக்கத்தில், கட்சிகள் இரண்டு இணைய சம்மதம் தெரிவிப்பதாக அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கிறது.

கூச்சிங்கில் இன்று மதியம் சரவாக் முதலமைச்சர் அபாங் ஜோஹாரி அபாங் ஓபெங் முன்னிலையில், பிபிபி (Parti Pesaka Bumiputera Bersatu) கட்சியின் தலைமையகத்தில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.