Home One Line P1 சிலாங்கூரில் இலவச நீர் விநியோகம் தொடரப்படும்!- அமிருடின் ஷாரி

சிலாங்கூரில் இலவச நீர் விநியோகம் தொடரப்படும்!- அமிருடின் ஷாரி

757
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒவ்வொரு ஆண்டும் செலவுகள் அதிகரித்த போதிலும், தேவைப்படும் தரப்பினருக்கான இலவச நீர் திட்டத்தை நிறுத்த சிலாங்கூர் மாநில அரசு விரும்பவில்லை என்று மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மாநிலத்தின் நிதி நிலைமை, இந்த திட்டத்தை செயல்படுத்தும் திறன் கொண்டதாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆயினும், மாநிலத்தின் நிதி நிலை குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

தேவைப்படும் தரப்பினருக்காக டாருல் ஏசான் நீர் திட்டத்தின் (Skim Air Darul Ehsan) மூலம் இலவச நீர் திட்டம் பராமரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

டாருல் ஏசான் நீர் திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதனால் இலவச நீர் திட்டம் நிலையானது மற்றும் தொடரப்படும்.” என்று நேற்று புதன்கிழமை இங்குள்ள லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையத்தை (எல்ஆர்ஏ) பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

2008-ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மக்கள் அனுபவிக்கும் இலவச நீர் திட்டம் இந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முடிவடைய உள்ளது. உண்மையாகவே தேவைப்படுவோருக்கும், மாநில அரசாங்கத்தின் நிதிக்கு குறைந்த சுமையாக இருக்கும் பட்சத்தில்,  மானியங்களை மீண்டும் ஒருங்கிணைக்க மாநில அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.

டாருல் ஏசான் நீர் திட்டத்தை மறுசீரமைப்பதன் மூலம், ஒரு மாதத்திற்கு 4,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்கள் அல்லது பி40 குழுவினர்கள் மட்டுமே இலவச தண்ணீரை அனுபவிப்பார்கள்.