Home உலகம் ரஷ்யாவில் 2வது குண்டு வெடிப்பு தாக்குதலில் 14 பேர் பலி

ரஷ்யாவில் 2வது குண்டு வெடிப்பு தாக்குதலில் 14 பேர் பலி

465
0
SHARE
Ad

Tamil-Daily-News_1724970341

மாஸ்கோ, டிசம்பர் 31- ரஷ்யாவின் வோல்கோகிராட் நகரில் நேற்று 2வது நாளாக நடத்தப்பட்ட மனித குண்டு தாக்குதலில் 14 பேர் பலியாயினர். ரஷ்யாவின் வடக்கு காகஸ்சஸ் பகுதியில் அமைந்துள்ளது வோல்கோகிராட் நகரம். இது செசன்யா  எல்லை பகுதியில் அமைந்துள்ளது.

இங்குள்ள முஸ்லிம் மக்கள் ரஷ்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். செசன்யாவில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பும், இங்குள்ள மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

#TamilSchoolmychoice

வோல்கோகிராட் அருகேயுள்ள சோச்சி பகுதியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி மாதம் நடக்கிறது.

இதை சீர்குலைக்க செசன்ய தீவிரவாதிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் வோல்கோகிராட் ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண் தீவிரவாதியை அனுப்பி தாக்குதல் நடத்தினர். இதில் 18 பேர் பலியாயினர். 45 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் வோல்கோகிராடில் நேற்று மீண்டும் மனித குண்டு வெடித்தது. பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 14 பேர் பலியாயினர், 17 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தொடர் தாக்குதலால் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள, பல நாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் வோல்கோகிராட்டில் பாதுகாப்பை தீவிரப்படுத்த அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.