Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவின் “அமுல்” பால் பொருட்கள் அமெரிக்காவில் உற்பத்தி!

இந்தியாவின் “அமுல்” பால் பொருட்கள் அமெரிக்காவில் உற்பத்தி!

1139
0
SHARE
Ad

Amul-300-x-200ஜனவரி 1 – இந்தியாவின் புகழ் பெற்ற “அமுல்” (Amul) முத்திரை சின்னம் கொண்ட பால் பொருட்கள் அடுத்த மாதம் பிப்ரவரி முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தொழிற்சாலையிலிருந்து உற்பத்தி செய்யப்படவிருக்கின்றன.

#TamilSchoolmychoice

குஜராத் மாநில பால் கூட்டுறவு விற்பனை அமைப்புதான் அமுல் பால் பொருட்களின் உரிமையைக் கொண்டுள்ளது என்பதோடு விற்பனையும் செய்து வருகின்றது.

முதல் கட்டமாக, நெய்,‘பன்னீர் (Paneer) என்ற பாலாடைப் பொருட்கள், ‘ஷிரிகாண்ட்’(Shrikhand)  என்ற தயிர் சார்ந்த இனிப்பு வகைகள் அமெரிக்காவில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.

அமெரிக்காவில் வாழும் 3 மில்லியன் இந்தியர்களையும் மற்றும் ஆசிய மக்களையும் சென்றடையும் நோக்கமாகக் கொண்டு இந்த அமுல் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள அமெரிக்கா வாழ் இந்திய வணிகர் ஒருவரின் உற்பத்தி சாலையிலிருந்து இணைந்து இந்த பால்பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பால் பொருட்களுக்குத் தேவையான பால், அமெரிக்காவில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படும்.

தற்சமயம் 1 பில்லியன் ரூபாய் (சுமார் 54 மில்லியன் ரிங்கிட்) மதிப்புடைய அமுல் பால் பொருட்கள் ஆண்டு தோறும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வேளையில் அதில் ஏறத்தாழ 35 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இதனை முன்னிட்டுதான் நேரடியாகவே அமெரிக்காவில் அமுல் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் வணிக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.