Home 13வது பொதுத் தேர்தல் மசீச மாநிலத் தலைவர்களின் பெயர்கள் அறிவிப்பு!

மசீச மாநிலத் தலைவர்களின் பெயர்கள் அறிவிப்பு!

896
0
SHARE
Ad

liow-tiong-lai5-june7_400_267_100கோலாலம்பூர், ஜன 2 – மசீச கட்சியின் பொதுச்செயலாளராக டத்தோஸ்ரீ ஆங் கா சுவானும், தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளராக டத்தோ யூ வெய்யும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற மசீச தேர்தலைத் தொடர்ந்து, கட்சியின் முதல் மத்தியச் செயலவை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் (படம்) 83 புதிய நியமனங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

அத்துடன் 13 மாநிலத் தலைவர்கள் பெயர்களையும் அறிவித்தார்.

இந்த நியமனங்கள் அனைத்தும் கட்சியின் முழு ஒத்துழைப்போடு  எடுக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் கட்சியின் உருமாற்ற திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும் லியாவ் குறிப்பிட்டார்.

13 மாநிலத் தலைவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

டத்தோ சுவா டீ யாங் – பெர்லிஸ், டத்தோ லீ சீ லியாங் – கெடா, டத்தின் படுகா சியூ மெய் ஃபன் – பினாங்கு, டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் – பேராக், டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் – சிலாங்கூர் மற்றும் மலாக்காவின் தற்காலிகத் தலைவர், டத்தோ யூ தியாங் லுக் – கூட்டரசுப் பிரதேசம், டத்தோ டாக்டர் வீ கா சியாங் – ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலானின் தற்காலிகத் தலைவர், டத்தோ ஹோ காய் முன் – பாஹாங், டத்தோ தோ சின் யாவ் – திரங்காணு, டத்தோ டாக்டர் ஹௌ கோக் சங் – கிளந்தான், வில்பிரட் யோங் சென் லியாங் – சபா