கொழும்பு, ஜன 3 – தான் சிறுவயதில் வாழ்ந்த இடத்தைப் பார்வையிட யாழ்பாணம் சென்றிருந்த போது, கைது செய்வோம் என்று இலங்கை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர் என்று கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்தார்.
தனக்கு அரசியல் ரீதியான நெருக்குதல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈழத்தமிழரும், கனடா நாடாளுமன்ற உறுப்பினருமான ராதிகா கடந்த டிச 28 ஆம் தேதி, யாழ்பாணம் சென்றிருந்தார். தனது பிறந்த ஊரான மாவிட்டப்புரம் சென்ற பிறகு அவர் தனது தங்கும் அறைக்கு வந்தார்.
அதன் பின்னர் அவரை சிங்கள உளவுத் துறையினர் தடுத்து வைத்தனர்.
இந்நிலையில் தன்னை நாடு கடத்தப் போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர் என்று ராதிகா தெரிவித்தார்.
மனித உரிமைப் பாதுகாப்பு இலகுவான விஷயமல்ல. எனினும் கருத்துச் சுதந்திரம், திறந்த பேச்சுவார்த்தைகளின் மூலமாக மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.