Home இந்தியா பிரித்வி-2 அணு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது

பிரித்வி-2 அணு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது

450
0
SHARE
Ad

pritvi

ஒடிசா, ஜன 7- அறிவியல், ஆயுத பலம், விண்வெளி ஆராய்ச்சி என பல்வேறு துறைகளிலும் வெற்றி கொடி நாட்டி வரும் இந்தியா, பிரித்வி-2 அணு ஏவுகணையை இன்று காலை வெற்றிகரமாக பரிசோதித்தது.

500 முதல் 1000 கிலோ எடையுள்ள போராயுதங்களை சுமந்து சென்று எதிரியின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பிரித்வி-2 ரக ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது.

#TamilSchoolmychoice

இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று ஒடிசா மாநிலம் பலசோர் அருகேயுள்ள சண்டிப்பூர் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.48 மணிக்கு ஏவப்பட்டது. 350 கிலோ மீட்டர் தொலைவில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கினை பிரித்வி-2 வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரவ எரிபொருளால் இயங்கும் இரட்டை இயந்திரங்களை கொண்ட பிரித்வி-2 ரக ஏவுகணைகள் கடந்த 2003-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டது. அதன் நவீன வடிவமைப்பான மற்றொரு ஏவுகணை கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி இதே இடத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.