இது குறித்து அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ ஷாஹ்ரிஸட் அப்துல் ஜாலில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசிய வரலாற்றில் இந்த முக்கியப் பதவியை ஒரு பெண்ணுக்கு வழங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் அரங்கில் கொள்கை இயற்றும் முக்கியப் பொறுப்பில் மகளிர் இருக்க வேண்டுமென்ற தேசிய முன்னணியைச் சேர்ந்த மகளிர் பிரிவின் போராட்டத்திற்கு இந்த நியமனம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றும் ஷாஹ்ரிஸட் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் தேசிய உருமாற்றுத் திட்டங்களின் வெற்றியில் மகளிர் முக்கியப் பங்கு வகிப்பதற்கு இந்த நியமனம் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். இதன்மூலம் மலேசியாவில் நிறைய பெண்கள் முன்வருவார்கள் என்று நான் நம்புகின்றேன் என்றும் ஷாஹ்ரிஸட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.