Home Featured நாடு கட்சிக்காக நஜிப் பதவி விலக வேண்டும் – அம்னோ மகளிர் தலைவர்

கட்சிக்காக நஜிப் பதவி விலக வேண்டும் – அம்னோ மகளிர் தலைவர்

704
0
SHARE
Ad

5481e7068c683bcd2b799f47827c2328கோலாலம்பூர் – கட்சிக்காகவும், மலேசியர்களுக்காகவும் அம்னோ தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தான் பதவி விலக வேண்டும் என்று கோபெங் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் ஹனிடா ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் அம்னோ உச்ச மன்றக் கூட்டத்திற்குப் பிறகு, கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படும் தலைவர்களில் இவரும் ஒருவர்.

“நான் கட்சியிலிருந்து நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆனால் நஜிப்பும் பதவி விலக வேண்டும்.”

#TamilSchoolmychoice

“நீங்கள் உங்களது தனிப்பட்ட விருப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சிக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று நஜிப் எப்போதும் கூறுவார். எனவே ஏன் அவர் தனது தனிப்பட்ட பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மலேசியர்களுக்காகவும், அம்னோவிற்காகவும் பதவி விலகக் கூடாது?” என்று சுபாங் விமான நிலையத்தில் ஹனிடா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

 படம்: நன்றி.. மலேசியாகினி