Home Featured நாடு காற்பந்தாட்டத் திடலில் பட்டாசு வீசியது தொடர்பில் 11 பேர் கைது!

காற்பந்தாட்டத் திடலில் பட்டாசு வீசியது தொடர்பில் 11 பேர் கைது!

814
0
SHARE
Ad

Malaysia - Saudiஷா ஆலாம் – காற்பந்தாட்டத் திடலில் பட்டாசு வீசியது தொடர்பில் 11 ரசிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக, ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் சாபியென் மாமாட் அறிவித்துள்ளார்.

நேற்று இரவு இங்குள்ள காற்பந்து அரங்கில் நடைபெற்ற மலேசியாவுக்கும், சவுதி அரேபியாவும் இடையிலான 2018 உலகக் கிண்ண தேர்வாட்டத்தின் போது, மலேசிய இரசிகர்கள் ஆத்திரம் கொண்டு, திடலில் பட்டாசு வெடிகளையும், புகைமூட்டம் உருவாக்கும் சிறுரக வெடிகளையும் வீசியதில் ஏற்பட்ட கலாட்டாவில், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.