Home நாடு ஏஎப்எப் சுசுகி கிண்ணம்: மலேசிய அணி தயார் நிலையில் உள்ளது!

ஏஎப்எப் சுசுகி கிண்ணம்: மலேசிய அணி தயார் நிலையில் உள்ளது!

1403
0
SHARE
Ad

ஹனோய்: இன்றிரவு வியட்னாமில் நடைபெற இருக்கும், 2018-ம் ஆண்டு ஏஎப்எப் சுசூகி கிண்ணத்திற்கான இரண்டாவது இறுதி ஆட்டத்தில் மலேசியக் காற்பந்து அணி வெல்லும் என அதன் கோல் காவலர் பாரிசால் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நாங்கள் அதிகம் பேச விரும்பவில்லை, போட்டியில் வெற்றிப் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளோம்” என அவர் கூறினார். 

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில், முதலாவது இறுதிச் சுற்றில், முதல் 30 நிமிடங்களில் மலேசியா 2-0 என்ற புள்ளிகளில் பின் தங்கியது, பின்னர், வியட்னாம் அணியுடன் ஈடுகொடுத்து 2-2 என்ற கோல் கணக்கில் சம நிலைக் கண்டது.

#TamilSchoolmychoice

மலேசிய அணியின் பயிற்சியாளர் டான் செங் ஹோ தங்களுக்கு கிடைத்த சிறந்த பயிற்றுனர் என பாரிசால் புகழாரம் சூட்டினார். விளையாட்டாளர்கள் தற்போது மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், சிறந்த ஒரு ஆட்டத்தினை இன்றிரவு வெளிப்படுத்த இருப்பதாகவும் பாரிசால் கூறினார்.   

மலேசியா கடந்த 2010-ம் ஆண்டு பயிற்சியாளர் டத்தோ கே. ராஜகோபாலின் கீழ் சுசூகி கிண்ணத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பிரதமர் துன் மகாதீர் முகமட் இன்றைய ஆட்டத்தில் மலேசிய அணி சிறந்த ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தும் எனவும், விளையாட்டாளர்கள் போட்டியில் வெற்றிப் பெற்று கிண்ணத்தை மலேசியாவிற்கு கொண்டு வருவார்கள் என நம்புவதாகவும், நேற்று அவரது முகநூல் பக்கத்தில் காணொளி வழி தெரிவித்திருந்தார்.