Home இந்தியா சாய்னா நேவால் திருமணம் எளிமையான முறையில் நடந்தேறியது!

சாய்னா நேவால் திருமணம் எளிமையான முறையில் நடந்தேறியது!

1631
0
SHARE
Ad

ஐதராபாத்: நேற்று வெள்ளிக்கிழமை ஐதராபாத்தில்  இந்தியாவின் பூப்பந்து நட்சத்திரங்களான சாய்னா நேவால் மற்றும் பருபல்லி கஷ்யப் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இத்திருமணம் சைபரபாட்டில் உள்ள சாய்னாவின் இல்லத்தில் நடைபெற்றது.   

சாய்னா மற்றும் காஷ்யப் குடும்ப உறவினர்கள் உட்பட சுமார் 40 விருந்தினர்கள் இத்திருமண விழாவில் கலந்து கொண்டனர். மிகவும் எளிமையாக முறையில் இவர்களது  திருமணம் நடந்ததாகவும், வருகிற டிசம்பர் 16-ம் தேதி விருந்துபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சாய்னாவின் தந்தை, ஹர்வீர் சிங் தெரிவித்தார்.

இவர்களின் திருமணப் புகைப்படத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் #justmarried எனும் ஹேஷ்டேக் வாயிலாக சாய்னா பகிர்ந்துள்ளார்.

#TamilSchoolmychoice

சாய்னா ஆண்டு தொடக்கத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற இந்தோனிசியா மாஸ்டர்ஸ் பூப்பந்து விளையாட்டில் இறுதிச் சுற்று வரை சென்றதோடு, பின்னர், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.