நிதிப் பிரச்சனைக் காரணமாக பெல்கிரா எப்சி அணி இம்முறை ஆட்டத்தில் பங்குப் பெற இயலாது என அறிவித்ததை அடுத்து, மூன்றாம் நிலையில் இருக்கும் மீபா அணிக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கடந்த ஆட்டங்களில், மீபா அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலும், எதிர்காலத் திட்டங்களை முறையாக திட்டமிட்டு வைத்திருப்பதாலும், அந்த அணிக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட்டதாக மலேசிய காற்பந்து லீக் (MFL) கூறியது.
மேலும், மீபா புதிய முதலீடுகளை பெற்று எதிர்காலத்தில் நிலையான ஒரு குழுவாக உருப்பெறும் என நம்புவதாக அந்த அமைப்பு நம்பிக்கைத் தெரிவித்தது.